Breaking News

மைத்திரிக்கு எதிராக ஐநா செல்லவுள்ளார் றிசாட் பதியுதீன்!



வில்­பத்து தேசிய பூங்காவுக்குரிய பிரதேசத்தை விரி­வு­ப­டுத்­து­வதற்கு அருகிலுள்ள அனைத்துக் காணிகளையும் அபகரித்து அதனை வில்பத்து தேசிய பூங்காவுக்குரியதாக மாற்றி வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுமாறு ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன உத்­த­ர­விட்­டுள்­ளமை மறிச்­சுக்­கட்­டியில் வாழும் முஸ்­லிம்­களின் பூர்­வீக காணி­களை அர­சாங்கம் அபகரிக்கும் முயற்சியே இது என அமைச்சர் றிசாட் பதியுதீன் குற்றம் சாட்டியுள்ளார்.

அத்துடன் ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன தனது பிழையான கொள்கையை மாற்றாவிட்டால் முஸ்லிம்கள் சார்பாக ஐக்கிய நாடுகள் சபை வரை சென்று நீதி கேட்பதற்குத் தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஞானசார தேரர், ஆனந்த சாகர தேரர் போன்ற இனவாதிகளுடன் ஜனாதிபதி கைகோர்த்திருப்பது முஸ்லிம்களை சந்தேகத்துக்குள்ளாகியுள்ளது. இவ்வாறான தேரர்களும் இனவாத சூழலியலாளர்களும் சில இனவாத ஊடகங்களும் ஜனாதிபதியைத் தவறாக வழி நடத்தி வருகின்றன.

மைத்திரிபால சிறிசேன ஆட்சியைக் கைப்பற்றினால் முஸ்லிம்களுக்கு விடிவு கிடைக்கும், நியாயம் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த முஸ்லிம்களை அவர் ஏமாற்றி வருவதாகவும் றிசாட் பதியுதீன் குற்றம் சுமத்தியுள்ளார்.