சம்பந்தனின் கோரிக்கைகள் நிறைவேறப்போவதில்லை!
புதிய பிரிவினைவாத அரசியலமைப்பு ஒருபோதும் நிறைவேற்றப்படாது என்பதை சகலரும் அறிவர் என பாராளுமன்ற உறுப்பினரும் கூட்டு எதிரணியின் தலைவருமான தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இருப்பினும் எதிர்க் கட்சி தலைவர் இரா.சம்பந்தன் மாத்திரம் அதனை அறியாதுள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் முன்வைக்கின்ற கோரிக்கைகள் என்று நிறைவேறப்போவதில்லை என அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் மக்கள் விரும்பாத ஒரு அரசியலைமப்பினை எந்த சந்தர்ப்பத்திலும் நிறைவேற்ற முடியாது என்பதே எமது நிலைப்பாடாகும் எனவும் குறிப்பிட்டார்.
புதிய அரசியலமைப்பினை அடுத்த ஆட்சியிலேயே கொண்டுவர முடியும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளமை தொடர்பில் ஊடகம் ஒன்று வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.