Breaking News

மகிந்தவின் எதிர்ப்புக்கு மத்தியில் சீனாவின் திட்டங்களை ஆரம்பித்து வைக்கவுள்ளார் ரணில்



சீனாவின் உதவியுடன் அம்பாந்தோட்டை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது உள்ளிட்ட தென்மாகாணத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வரும் ஜனவரி 7ஆம் நாள் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

இந்த நிகழ்வில் சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் யி ஷியான்லியாங் மற்றும் முக்கிய அமைச்சர்களும் கலந்து கொள்ளவுள்ளதாக, ருகுணு அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் தலைவர் அஜித் கோஸ்தா தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தின் கீழ், துறைமுகம், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, மற்றும் கைத்தொழில் பூங்கா என்பன அபிவிருத்தி செய்யப்படும்.

இதற்காக அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80 வீத உரிமை சீனாவுக்கு வழங்கப்படவுள்ளதுடன், அம்பாந்தோட்டை, மொனராகல, மாத்தறை மாவட்டங்களில் 15 ஆயிரம் ஏக்கர் காணிகளும் சீன நிறுவனங்களுக்கு வழங்கப்படவுள்ளது.

இதற்கு சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது