Breaking News

காணாமல்போன உறவுகளின் போராட்டத்தில் நால்வர் கவலைக்கிடம்

வவுனியாவில் உணவு
தவிர்ப்பில் ஈடுபட்டவர்களில் நால்வரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற வைத்தியர்கள் குழுவினர் பரிசோதனை நடத்தியதுடன் தொடர்ந்தும் உண்ணாவிரதம் மேற்கொண்டால் மேலும் உடல் நிலை கவலைக்கிடமாக போக வாய்ப்புள்ளதாக கூறியுள்ளனர்.

தமிழ் அரசியல் தலைமைகள் விரைந்து செயற்படுமாறு மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.








எனினும் தொடர்ந்தும் உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. என அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றாபர். 

நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடந்த மூன்று நாட்களாக கொட்டும் மழையிலும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கியமான செய்திகளை அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்