உத்தேச அரசியலமைப்பு குறித்து விளக்கமளிக்கும் விசேட கருத்தரங்கு
வடமாகாண பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உத்தேச அரசியலமைப்பு தொடர்பாக விளக்கமளிக்கும் விசேட கருத்தரங்கு நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது.
கல்வி அமைச்சு மற்றும் அரசியலமைப்பு சபை ஆகியவற்றின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த கருத்தரங்கானது, மன்னார் சித்திவிநாயகர் இந்துக்கல்லூரியில் நடைபெற்றது.
மன்னார் வலயக்கல்வி திணைக்களத்தின் சமூக, விஞ்ஞான பிரிவு பொறுப்பதிகாரி எம்.ஆர்.பிரின்ஸ் டயஸ் தலைமையில் இடம்பெற்ற கருத்தரங்கில் அரசியலமைப்புச் சபை உறுப்பினர்கள் சார்பாக சட்டத்தரணி எம்.எஸ்.நவாஸ் மற்றும் சிரேஸ்ட அதிகாரி கிருஸ்னானந்தன் ஆகியோர் கலந்து கொண்டு விரிவுரையாற்றி இருந்தனர்.
உத்தேச அரசியலமைப்பு தொடர்பாக விளக்கமளிக்கும் குறித்த கருத்தரங்கில் மன்னார் பாடசாலையில் உயர்தர வகுப்பில் அரசியல் பாடம் கற்கின்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என தெரிவுசெய்யப்பட்ட 130 பேர் பங்குபற்றியிருந்தனர்.