ஜல்லிக்கட்டை மையமாக வைத்து அமீர் இயக்கும் `சந்தனத்தேவன்'
தமிழ் சினிமாவில் எதார்த்தமான படங்களை கொடுத்து தனக்கென ஒரு தனிஇடத்தை பிடித்துள்ளவர் இயக்குநர் அமீர். திரைக்கதையின் மூலம் ரசிகர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் அமீரின் படங்களுக்கென்றே தனி ரசிகர் கூட்டம் உள்ளது. `சேது`, `மௌனம் பேசியதே`, `பருத்திவீரன்`, `ஆதி பகவன்` உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள அமீர், ஒருசில படங்களில் நடித்துள்ளார்.
3 வருடங்களுக்கு பிறகு அமீர், இயக்கும் படத்தில் ஆர்யா நடிக்க உள்ளார். அமீர்-ஆர்யா முதன்முறையாக இணையவுள்ள இப்படத்திற்கு `சந்தனத்தேவன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும் படத்தின் பர்ஸ்ட் லுக்கும் இன்று வெளியிடப்படது. இதில், `சந்தனத்தேவன்' செங்கொடி மறவனின் கதை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அடங்க மறு... அத்துமீறு... திமிறி எழு... திருப்பி அடி... மண்ணை நேசி... மனிதனாக இரு... என்ற வாசகமும் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தில்ஆர்யா ஜல்லிக்கட்டு வீரராக நடிக்க உள்ளார். ஜல்லிக்கட்டை மையமாக வைத்து எடுக்கப்படும் இப்படத்தில் அமீர், ஆர்யாவின் தம்பி சத்யா உள்ளிட்டோரும் நடிக்க உள்ளனர்.
இப்படத்தை அமீரின், அமீர் பிலிம் கார்பரேசன்(ஏஎப்சி) நிறுவனம் தயாரிக்க உள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.
மஞ்சப்பை பட இயக்குநர் ராகவனின் `கடம்பன்' படம் வெளியாக உள்ள நிலையில், ஆர்யா அமீரின் `சந்தனத்தேவன்' படத்தில் நடிக்க உள்ளார்.