விரைவில் மாவீரர்களுக்கும் நினைவுத்தூபி எழுப்புவோம்!
வன்னி எம்.பி.சி.சிவமோகன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் இரண்டாவது சிலையும் திறந்து வைக்கப்பட்டது. இதன் மூலம் தமிழினம் கல்வியிலும் கலாச்சாரத்திலும் மீண்டெழும் என வைத்திய கலாநிதி சி.சிவமோகன் தெரிவித்தார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் ஒருவன் பயணிக்கும் பாதை தவறெனின் அதில் தடைகள் இராது. தான் பயணிக்கும் பாதையில் தடைகள் இடப்படுகிறது என்றால் அந்த பாதை சரியானதே.
எத்தனை தடைகள் வந்தாலும் தடைகளை தகர்த்தெறிந்து முன்னேறும் மனோபலம் என்னிடம் உள்ளது. காலங்கள் கனியும் போது எமது மாவீரர்களுக்கும் நினைவுத்தூபி எழுப்புவோம் என்றார்.