Breaking News

நாட்டில் காலநிலையில் மாற்றம்... பொதுமக்களுக்கு அவதான எச்சரிக்கை!

இலங்கைக்கு அண்மித்த வளிமண்டலப்பரப்பில் ஏற்பட்டுள்ள அலை வடிவான வளிமண்டல குழப்பத்தின் தாக்கத்தினால், நாட்டின் அநேகமான பகுதிகளில் காற்றுடனான காலநிலை நிலவும் என்று தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் சில பகுதிகளில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி ஏற்படும் என்று எதிர்வு கூறப்படுகிறது.மேலும் இடிமின்னலும் அதிகமாக காணப்படும் நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பான நடைமுறைகளை பின்பற்றுமாறு கோரப்பட்டுள்ளது.