Breaking News

தமிழ் தலைவர்களுக்கு எதிராக போராட வேண்டிய காலம் சிவகரன் (காணொளி)

தற்போதைய நிலையில் த.தே.கூட்டமைப்பின்
தலைமைகள் மிகவும் மோசமான நிலைக்கு சென்றுகொண்டிருப்பதாக குற்றம்சாட்டியிருந்த தமிழரசுகட்சியின் மூத்த உறுப்பினரும் மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் தலைவருமான வி.சிவகரன் தெரிவித்துள்ளார்..

தற்போதைய நிலையின் த.தே.கூட்டமைப்பின் போக்கிற்கும் சிறீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் ஐ.தே.கட்சிக்கும் மற்றும் ஈ.பி.டி.பி ஆகியவற்றின் போக்கிற்கும் இடையில் ஏதாவது வித்தியாசம் இருப்பதாக தெரியவில்லை எல்லோரும் ஒரே கருத்தையே கொண்டிருப்பதாகவும் மிகவும் கடுமையான கூட்டமைப்பின் தலைமைகளின் செயற்பாட்டை விமர்சித்துள்ள சிவகரன் வரவுள்ள அரசியலமைப்பு பற்றியும் மிகநீண்ட உரையினை ஆற்றியிருந்தார்.

அவர் அங்கு பேசும்போது எதிர்வரும் காலத்தில் நாங்கள் நாங்களாகவே இருந்து தமிழ்மக்களே தமிழ் தலைவர்களுக்கு எதிராக போராட வேண்டிய காலம் வந்துள்ளதாகவும் அதற்கு அனைவரும் தயாராகுமாறும் வேண்டுகோள் விடுத்திருந்ததோடு அவர் அவ்வாறு பேசியபோது அரங்கு நிறைந்த கரகோசம் எழுப்பப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.




முன்னைய காணொளிகள்





முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்