Breaking News

“இருளுள் இதய பூமி” ஆவணப்படம் வெளியீடு(காணொளி)

யாழ் ஊடக அமையத்தினால் தயாரிக்கப்பட்ட
“இருளுள் இதய பூமி” ஆவணப் படம் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் சமூகத் தலைவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு, இன்று (12) திங்கட்கிழமை பிற்பகல் 03.30 மணி முதல் யாழ் ஊடகம் அமையம் அருகிலுள்ள கலைத் தூது மண்டபத்தில் இடம்பெற்றது.

மணலாறு எல்லைக் கிராமங்கள் பற்றிய உண்மையினை வெளிக் கொணரும் வகையில் அமைந்த இவ் ஆவணப் படத்தின் வெளியீட்டு நிகழ்வில் வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன், மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவாஜிலிங்கம், ரவிகரன், ஐங்கரநேசன், தவராஜா, சி.வி சிவஞானம், ஆர்னள்ட், கஜதீபன் என பலஅரசியல் பிரமுகர்களும் சிவில் சமூக பிரதிநிதிகள், மக்கள் பேரவை பிரதிநிதிகள், ஆர்வலர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.



அங்கு கலந்துகொண்ட வடமாகாண முதலமைச்சர் பேசுகையில் சர்ச்சைக்குரிய கொக்கிளாய் விகாரை அமைப்பிற்கான அனுமதி வழங்கியமை, காணி பங்கீடு உள்ளிட்ட பல மோசடிகளில் தொடர்புபட்ட சர்ச்சைக்குரிய நபரான கரைதுறைபற்று பிரதேச முன்னாள் செயலாளரை முல்லைதீவு மாவட்டத்திற்கு புதிய அரச அதிபராக நியமிக்க சதி முயற்சிகள் இடம்பெறுவதாக வடமாகாண முதலமைச்சர் அம்பலப்படுத்தியுள்ளார். இலங்கை அரசின் இச்சதி முயற்சியின் பின்னணியினில் தமிழ் அரசியல் தரப்பினை சேர்ந்தவர்களும் இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.










முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்