வடக்கிலிருந்து இராணுவம் 2017இல் வெளியேறுமா?
வடக்கில் பொதுமக்களின் காணிகளில் அமைந்திருக்கும் இராணுவ முகாம்களை அகற்றி பொதுமக்களின் பூர்வீக நிலங்களை மீள கையளிப்பதற்கு நல்லாட்சி அரசு அடுத்த ஆண்டில் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று முல்லைத்தீவு கச்சேரி முன்னாள் நிர்வாக உத்தியோகத்தர் ரட்ணசாசா தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு ஊடக அணியினரை இன்று தொடர்பு கொண்ட அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாபுலவு மக்களின் காணிகளை இராணுவத்தினர் தம்வசம் வைத்திருப்பதினால் பொதுமக்கள் பொருளாதார ரீதியில் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.
மற்றும் பொதுமக்களின் காணிகளில் உள்ள முள்ளிவாய்க்கால் கடற்படை முகாம்களும் அதன் பாதுகாப்பு அரண்களும் பலமடைந்து வருவது வருந்தத்தக்கது.
வடமாகணத்தில் பல்வேறு இடங்களில் இருந்து இராணுவத்தினர் வெளியேறி இருந்தாலும், மேலும் பல இடங்களில் பொதுமக்களின் காணிகளில் முப்படையினர் தளம் அமைத்தாலும் அவற்றை, மேலும் பலப்படுத்தி வருதலும் பொதுமக்களுக்கு எதிராக செயற்படுவாதாகவே பொதுமக்கள் கருதுகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.