Breaking News

சீனாவுக்கு விற்கும் திட்டத்துக்கு எதிராக நீதிமன்றத் தடை உத்தரவு பெற வாசுதேவ திட்டம்



அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80 வீத உரிமையை சீனாவுக்கு விற்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் முயற்சிக்கு எதிராக, நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப் போவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், தமது கட்சியின் சார்பில் இந்த மனு தாக்கல் செய்யப்படும் என்றும் குறிப்பிட்டார்.

பெறுமதிமிக்க நிலங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் விற்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் அதன் சுற்றாடலில் உள்ள நிலங்களை சீனாவுக்கு வழங்குவதற்கு எதிராக சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் மகிந்த அணியைச் சேர்ந்த வாசுதேவ நாணயக்கார நீதிமன்றத் தடை உத்தரவைப் பெறப் போவதாக எச்சரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.