வறட்சியான காலநிலை நிலவும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
வடக்குக் கிழக்கு மாகாணங்களில் தொடரும் வறட்சியான காலநிலை தொடர்ந்து இரண்டு நாட்கள் நீடிக்கும் என வானிலை அவதானிப்பு மையம் எச்சரித்துள்ளது.
எனினும் வடக்குக் கிழக்கு மற்றும் ஊவா மாகாணத்திலும், அத்துடன் அம்பாந்தோட்டை மாவட்டத்தின் பல இடங்களிலும் மழை பெய்யக்கூடுமெனவும், மேல் சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் பிற்பகல் 2 மணிக்கு பிறகு மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அத்துடன், இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் மின்னலினால் ஏற்படும் பாதிப்புக்களைக் குறைப்பதற்காக பொதுமக்களை முன்னெச்சரிக்கையாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.