Breaking News

வட மாகாண சபை உறுப்பினராக ஆ.புவனேஸ்வரன் பதவியேற்பு



தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மத்திய குழு உறுப்பினர் ஆ.புவனேஸ்வரன் நேற்று வட மாகாண சபை உறுப்பினராக பதவியேற்றார்.

வட மாகாண பேரவைச் செயலக்கத்தில் பேரவையின் தலைவர் ஊ.ஏ.மு.சிவஞானம் முன்னிலையில் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினராக அவர் பதவியேற்றுள்ளார்.

இந்த நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர்கள் விந்தன் கனகரத்தினம், சயந்தன் மற்றும் கட்சியின் ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.

அண்மையில் காலமான பிரதி அவைத் தலைவர் அன்ரனி ஜெகநாதனின் முல்லை மாவட்ட உறுப்பினர் வெற்றிடம் இதன்மூலம் நிரப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.