விமான விபத்தில் உயிரிழந்தோரில் 64 பேர் இசைக்குழு உறுப்பினர்கள்
கருங்கடலில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகிய ரஷ்ய இராணுவ விமானவிபத்தில் 64 இசைக்குழு உறுப்பினர்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
91 பயணிகளுடன் சென்ற ரஷ்ய இராணுவ விமானம் கருங்கடலில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு பிரிவு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
ரஷ்யாவின் சோச்சி நகரிலிருந்து சுமார் 91 பயணிகளுடன் சென்ற Tu-154 இராணுவ விமானமே விபத்துக்குள்ளாகியது. இதில் 84 பயணிகள் மற்றும் 8 பணியாளர்கள் பயணித்துள்ளனர்.
விமானத்தில் பயணித்தவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என பாதுகாப்பு தரப்பினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். விபத்தில் உயிரிழந்த ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
விபத்து ஏற்பட்ட பகுதியில் தேடுதல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சோச்சி நகரிலிருந்து புறப்பட்ட விமானம் 20 நிமிடங்களில் அது ராடர் கட்டமைப்பில் காணாமல் போயிருந்தது.
சிரியாவின் Latakia மாகாண வான்பரப்பில் விமானம் பறந்து கொண்டிருந்த போது காணாமல் போயுள்ளது.
இதன் பின்னணியில் பயங்கரவாத அச்சுறுத்தல் இருக்கலாம் என்றும், எனினும் இது உறுதிப்படுத்தப்படாத செய்தி என்றும் சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.