Breaking News

ஜெயாவைப் போலவே பன்னீர்செல்வம், ஸ்டாலினும் செயற்பட வேண்டும்!

இலங்கை விடயத்தில், ஜெயலலிதா ஜெயராமைப் போன்று, தமிழகத்தின் புதிய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோரும் செயற்பட வேண்டும் என, வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். 

ஜெயலலிதாவின் கொள்கையைப் போலவே, ஈழத் தமிழர் விடயத்தில் இலங்கைக்கு தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

அத்துடன், பன்னீர்செல்வம் மற்றும் ஸ்டாலின் ஆகியோர், இலங்கைத் தமிழர் விடயத்தில் அதே ஆர்வத்தை கொண்டிருப்பார்கள் என தான் நம்புவதாகவும் சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை, ஜெயலலிதா ஜெயராம், இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பில் எப்போதும் புது டெல்லிக்கு அழுத்தம் கொடுத்தவர் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.