இளைஞர் யுவதிகள் மீண்டும் ஆயுதம் ஏந்தும் நிலைக்கு தள்ளப்படுவர்
இளைஞர் யுவதிகள் மீண்டும் ஆயுதம் ஏந்தும் நிலைக்கு தள்ளப்படும் அபாயம் உள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் நாட்டு வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கையை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. அத்துடன் புதிய அரசியலமைப்பை நிறைவேற்றிக்கொள்வதற்கு மிகுந்த அவசரம் காட்டி வருகிறது. எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் அரசியலமைப்பு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அதனை நிறைவேற்றிக்கொள்வதற்கு எதிர்பார்த்து வருகின்றது.
எனவே இவ்வாறான செயற்பாடுகளினால் இளைஞர் யுவதிகள் மீண்டும் ஆயுதம் ஏந்தும் நிலைக்கு தள்ளப்படுவர் என அவர் எச்சரித்துள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு பொரளையிலுள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.