“பிரபாகரனுக்கு அனுமதியளித்த அரசு எம்மை தடுக்கிறது” : ஞானசாரதேரர்
மட்டக்களப்புக்கு எம்மை செல்லவிடாமல் தடுப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பும் முஸ்லிம் அடிப்படைவாதிகளுமே செயல்பட்டுள்ளனர். இவர்களுக்கு சிங்களவர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்படவேண்டும் என்ற தேவை இருக்கின்றது என பொதுபல சேனாவின் செயலாளர் ஞானசாரதேரர் தெரிவித்தார்.
பொதுபல சேனாவின் தலைமைக்காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டில் பாரிய யுத்தம் ஒன்றை ஏற்பத்தி மனித படுகொலைகளை மேற்கொண்ட பிரபாகரனை மாவீரர் தினத்தன்று கொண்டாடியதை அரசாங்கம் அனுமதித்தது. அதற்கு எந்த தடை உத்தரவும் பிரயோகிக்கவேண்டும் என எமது புலனாய்வு பிரிவினர் தெரிவிக்கவில்லை. ஆனால் சிங்கள் அமைப்புக்கள் எந்த முறையில் கூட்டம் நடத்தினாலும் புலனாய்வு பிரிவினர் பாதுகாப்பை காரணம் காட்டி தடை உத்தரவு கோருகின்றனர். அந்த அளவுக்கு நாட்டில் சிங்களவர்களுக்கு சுதந்திரமாக செயற்பட முடியாதநிலை இருந்துவருகின்றது. இதனை தொடர்ந்தும் பொருத்துக்கொண்டு இருக்கமாட்டோம் என அவர் மேலும் தெரிவித்தார்.