92 பயணிகளுடன் சென்ற ரஷ்ய விமானம் கடலில் விழுந்தது
92 பயணிகளுடன் சென்ற ரஷ்யாவின் ராணுவ விமானம் கருங்கடலில் விழுந்து விட்டதாக ரஷ்ய பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சோச்சி நகரிலிருந்து ரஷ்ய நேரப்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 5.20 மணிக்கு கிளம்பிய இந்த விமானம், கிளம்பிய 20 நிமிடங்களில் ரேடார் (தரைத்தொடர்பு) பார்வையிலிருந்து விலகியுள்ளது.
இந்த விமானத்தின் உடைந்த பாகங்கள் தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளன.
ரஷ்யாவின் டியு-154 ரக விமான வகையை சேர்ந்த இந்த விமானத்தில், ரஷ்ய ராணுவத்தினர், புகழ்ப்பெற்ற அலெக்ஸான்ட்ராஃப் ராணுவ இசைக்குழு உறுப்பினர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் ஆகியோர் இருந்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சிரியாவில் உள்ள லடாகியா மாகாணத்தை நோக்கி இந்த விமானம் சென்று கொண்டிருந்தது.
மாஸ்கோவில் இருந்து புறப்பட்ட இந்த விமானம், சோச்சி நகரில் உள்ள அட்லெர் விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக தரையிறங்கியது.