விடுதலை புலிகளை அழித்த முறையில் கஞ்சாவை அழிக்க யோசனை
அதுபோலவே கஞ்சா பயிரிடும் இடங்களையும் ஆளில்லா விமானங்கள் மூலம் இணங்கண்டு இல்லாதொழிக்குமாறு ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக்க பதிரண ஆலோசனை வழங்கினார்.
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாவுக்கான நேரத்தின் போது மேலதிக கேள்வி எழுப்பும் போதே சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்கவிடம் குறித்த ஆலோசனையை வழங்கினார்.
யுத்தத்தின் போது விடுதலை புலிகள் இயக்கத்தை ஆளில்லாத விமானங்கள் மூலமே இணங்கண்டு அந்த இயக்கம் அழித்தொழிக்கப்பட்டன.
எனவே அதுபோலவே இலங்கையில் கஞ்சா பயிரிடும் இடங்களை ஆளில்லா, விமானங்கள் மூலம் இனங்கண்டு முழுமையாக இல்லாதொழிக்க முடியும் எனவும் அவர் ஆலோசனை வழங்கினார்.