Breaking News

இறுதி யுத்தத்திற்கு செலவிடப்பட்ட தொகை தெரியுமா? அம்பலப்படுத்தினார் மேனன்



விடுதலைப்புலிகளுடன் நடைப்பெற்ற யுத்தத்திற்காக இலங்கை அரசு சுமார் 200 பில்லியன் அமெரிக்க டொலரை செலவு செய்ததாக முன்னாள் இலங்கைக்கான இந்திய தூதுவராக கடமையாற்றியவரும் இந்திய மத்திய அரசின் பாதுகாப்பு ஆலோசகருமான சிவசங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.

அவர் எழுதியுள்ள ஓர் புத்தகத்திலேயே இந்த விபரங்களை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

1983ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் இடம்பெற்ற மோதல்களில் போராளிகள் உள்ளிட்ட இரண்டு தரப்பிலும் ஒரு இலட்சம் பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். 

யுத்தத்தால் சுமார் 80 ஆயிரம் முதல் ஒரு இலட்சம் வாரையிலான பொது மக்கள் இறந்திருக்கலாமெனவும் இதில் தமிழ் சிங்கள மக்களும் உள்ளடங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தில் சுமார் 27693 விடுதலைப் புலிகள் மரணமடைந்துள்ள அதேநேரம் அரசு படைகள் சுமார் 23790 பேர் இறந்திருப்பதாகவும் என தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அமைதிகாக்கும் படையை சார்ந்த 1155 பேர் உயிரிழந்ததாவும் 3 இலட்சம் பேர் இடம் பெயர்ந்ததாகவும் வடக்கு – கிழக்கில் சுமார் 1.6 மில்லியன் மிதிவெடிகள் புதைக்கப்பட்டிருந்ததாகவும் தனது நூலில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த போருக்கு இருதரப்பினருமே காரணம் எனவும் இவர் மேலும் குறிப்பிடுட்டிருப்பதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.