வரலாறு காணாத வகையில் யாழ். குடாநாட்டில் காலநிலை மாற்றம்
யாழ்.குடாநாட்டில் காற்று மற்றும் மழையுடன் கூடிய காலநிலை நீடித்துவரும் நிலையில் வரலாறு காணாத வகையில் குடாநாட்டின் வெப்பநிலை 19.8 பாகை செல்சியஸ் ஆக உள்ளதாக யாழ். மாவட்ட வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி பிரதீபன் கூறியுள்ளார்.
நாட்டின் வடக்கு பகுதிகளில் காணப்படும் காலநிலை மாற்றம் தொடர்பில் இன்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தெற்மேற்கு வங்க கடலில் உருவான ‘நடா’ சூறாவளி தற்சமயம் காங்கேசன்துறையில் இருந்து வடக்கே 200 கி லோ மீற்றர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது. இது தமிழகத்தின் வடக்
கு பக்கமாக நகர்ந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேவேளை புத்தளம் தொடக்கம் காங்கேசன்துறை, திருகோணமலை ஆகிய பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 30 கிலோ மீற்றர் தொடக்கம் 40 கிலோ மீற்றர் வேகம் வரையில் காணப்படும் அதேவேளை கா
ற்றின் வேகம் 60 தொடக்கம் 70 கிலோ மீற்றர் வரையில் அதிகாரிக்கலாம்.
மேலும், ஆழம் கூடிய பகுதிகளில் காற்றின் வேகம் 60 தொடக்கம் 70 கிலோ மீற்றர் வரையில் இருக்கும் எனவே கடற்றொழிலாளர்கள் அவதானமாக இருக்கும்படி எச்சரிக்கப்படுகின்றார்கள்.
மேலும் நேற்று மாலை 16.8 பாகை செல்சியஸ் ஆக காணப்பட்ட குடாநாட்டின் வெப்ப நிலையானது, தற்சமயம் குறைந்துள்ளமையினால் குளிர் அதிகமாக காணப்படும்.
மேலும் தற்சமயம் காற்று தரையில் 26 கிலோ மீற்றர் வேகத்தி
ல் வீசி வருகின்றது. மேலும் நேற்று மாலை தொடக்கம் இன்றைய தினம் காலை 8.30 மணி வரையில் 35 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதில் பருத்தித்துறை – வல்லிபுரம் பகுதியில் அதிகளவு மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது” எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.