Breaking News

'அடுத்த ஜனாதிபதி தேர்தலில் நான் போட்டியிடுவேன்' - கோத்தாபய



2021ம் ஆண்டு நடைபெறவிருக்கும் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தான் நிச்சயமாக போட்டியிடுவதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ கடந்த நாட்களில் உறுதியாக தெரிவித்துள்ளார். இலங்கையில் வியாபார சாம்ராஜ்யத்தின் முதல்தர வியாபாரி ஒருவரிடம் தனிப்பட்ட ரீதியில் தெரிவித்துள்ளார்.

தான் எந்த கட்;சியில் போட்டியிட தீர்மானித்திருப்பதாக வியாபாரி வினவியபோது 'மலர் மொட்டில் கை வைப்பதற்கு முடிந்த ஒரே நபர் நான் தான்' என கோத்தாபய பதிலளிக்கும் போது தெரிவித்துள்ளார்.

கோத்தாபய ராஜபக்ஷ இந்நாட்களில் அவரினால் உருவாக்கப்பட்ட 'அறிவுசார் வழிகாட்டி' என்ற அமைப்பின் ஊடாக நாடு முழுவதும் விரிவுகைள் மற்றும் கருத்தரங்குகள் நடத்துவதன் இறுதி நோக்கம் அடுத்த ஜனாதிபதி தேர்ததல் என சுட்டிக் காட்டும் அரசியல் விமர்சகர்கள் மேலும் சுட்டிக்காட்டுவது, கடந்த ஆட்சி காலத்தில் அவர் மேற்கொணட மோசடி தொடர்பில் விசாரனை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை வெளியிடுவதுடன் 2021ம் ஆண்டுக்கு முன் கோத்தாபயவின் குடியுரிமையை இரத்து செய்தல் கட்டாய விடயமாக அமையும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.