Breaking News

சம்பந்தனை சாதிக்க விடமாட்டோம்: ஜப்பானில் முழங்கிய ராஜபக்ஷ ஆதரவாளர்



விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனால் யுத்தத்தில் வெற்றிகொள்ள முடியாததை, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் அதற்கு எந்த வகையிலும் இடங்கொடுக்க மாட்டோம் என்றும் மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினரான நிரோஷன் பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.

அடுத்த நாடாளுமன்ற அமர்வு ஆரம்பிக்கப்பட்டவுடன் அதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அதற்கு ஜப்பானில் உள்ள இலங்கையர்களை உதவுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ சகிதம் ஜப்பான் சென்றுள்ள நிரோஷன், அங்குள்ள இலங்கையர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மக்கள் கேட்ட சுதந்திரத்தையே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் இராணுவத்தினர் பெற்றுக்கொடுத்ததாக தெரிவித்துள்ள நிரோஷன் பிரேமரத்ன, நாட்டைக் காத்தவர்கள் இப்போது தண்டிக்கப்படுகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.