Breaking News

கடற்படைத் தளபதிக்கு எதிராக ஊடகவியலாளர் முறைப்பாடு



அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சிறிலங்கா கடற்படைத் தளபதி தம்மைத் தாக்கினார் என்று, ஊடகவியலாளர் திலீப் ரொசான், சிறிலங்கா காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தில், வேலை நிறுத்தம் செய்யும் பணியாளர்களால் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஜப்பானிய கப்பலை விடுவிப்பதற்கு, நேற்றுமுன்தினம் மாலை சிறிலங்கா கடற்படையினர் நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.

அதனைப் படம் பிடித்த ஊடகவியலாளர் திலீப் ரொசான், சிவில் உடையில் இருந்த சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தனவினால் தாக்கப்பட்டிருந்தார்.

தாக்கப்பட்ட ஊடகவியலாளர் திலீப் ரொசான், நேற்று அம்பாந்தோட்டை உதவி காவல்துறை கண்காணிப்பாளர் பணியகத்தில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.

அதில், நன்கு கொழுத்த, அரைக்காற்சட்டையும், நீலச் சட்டையும் அணிந்திருந்த ஒருவர் தம்மைத் தாக்கியதாகவும், சிறிலங்கா கடற்படைத் தளபதியே அவர் என்று பின்னர் அறிந்து கொண்டதாகவும் கூறியுள்ளார்.

தம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாகவும் அவர் விபரித்துள்ளார்.