வட மாகாணசபைக்கு தனியான தேசிய கீதமா? – அவைத் தலைவர் நிராகரிப்பு
வடக்கு மாகாணசபை தனியான தேசிய கீதம் ஒன்றை இயற்றவுள்ளதாக, சிங்கள நாளிதழான, திவயின நேற்றுமுன்தினம் வெளியிட்டிருந்த செய்தியை வடமாகாணசபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் நிராகரித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், இந்தச் செய்தி முற்றிலும் தவறானது என்றும், தவறான நோக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
சிறிலங்காவின் ஏனைய மாகாணசபைகள், மாகாண கீதங்களை இயற்றியுள்ளன. அதுபோல, வடக்கு மாகாணசபையும் மாகாண கீதம் ஒன்றை இயற்றுவதற்கே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் வடமாகாணசபை அவைத் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.