சர்வதேச ரீதியாக விருது பெற்ற ஜனாதிபதி
சிறுநீரக நோய்களுக்காக விசேட வைத்திய நிபுணர்களின் சர்வதேச அமைப்பினால் ஜனாதிபதிக்கு சிறப்பு விருது ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் சிறுநீரக நோயை தடுக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட நடவடிக்கையை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை கொழும்பு காலி முகத்தில் ஹோட்டலில் இடம்பெற்ற நிகழ்வில் ஜனாதிபதிக்கு இந்த சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது.
சிறுநீரக நோய்களுக்காக விசேட வைத்திய நிபுணர்களின் சர்வதேச அமைப்பின் தலைவர் பேராசிரியர் Adeera Levin என்பவரினால், ஜனாதிபதிக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
இதன் போது இலங்கையில் சிறுநீரக நோயை தடுப்பதற்கு உதவிய வைத்தியர்கள் உட்பட அதிகாரிகளுக்கு ஜனாதிபதியினால் விருது வழங்கி வைக்கப்பட்டுள்ளது.