Breaking News

திருகோணமலை துறைமுகம் மீதே அமெரிக்காவுக்கு கண் – திஸ்ஸ விதாரண



கடற்படைத்தள விரிவாக்கத் திட்டத்துக்காக திருகோணமலைத் துறைமுகத்தின் மீது அமெரிக்கா கண் வைத்திருப்பதாக, முன்னாள் அமைச்சரும் லங்கா சமசமாசக் கட்சியின் தலைவருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண எச்சரித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்,

“இந்தப் பிராந்தியத்தில் தனது போர்த் தளங்களை விரிவாக்குவதற்காக திருகோணமலைத் துறைமுகத்தை கைப்பற்றுவதற்கு அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

சிறிலங்காவை அமெரிக்கா வசப்படுத்தி வருகிறது. சுமார் 400 மில்லியன் டொலர் பெறுமதியான – அதிக விலையான போர் விமானங்களைக் கொள்வனவு செய்யுமாறும் சிறிலங்காவுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருகிறது” என்றும் அவர் குறிப்பிட்டார்.