Breaking News

தயா மாஸ்டருக்கெதிரான விசாரணைகள் நிறைவு

தமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் பேச்சாளராக செயற்பட்ட தயா மாஸ்டர் எனப்படும் வே.தயாநி திக்கு எதிராக கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் நிறைவு பெற்றுள்ளன.


சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய நீதிபதி கிஹான் பிலப்பிட்டிய இந்த விசார ணைகளை முடிவுக்கு கொண்டுவருவதாக நேற்று அறிவித்துள்ளார்.

வவுனியா உயர் நீதிமன்றத்தில் தயா மாஸ்டருக்கு எதிராக சட்டா அதிபர் திணைக்களம் வழக்கு பதிவு செய்துள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இறுதிக் கட்டப் போரின் போது மக்களை பணய கைதிகளாக தமிழீழ விடுதலை புலிகள் தடுத்து வைத்த மை தொடர்பான குற்றச்சாட்டில் சட்டமா அதிபர் திணைக்களம் வழக்கு பதிவுசெய்துள்ளது.

அதனால்   கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்ற விசாரணைகளை முடிவுக்கு கொண்டுவருமாறு சட்டமா அதிபர் திணைக்களம் அறிவுறுத்தல் விடுத்திருந்தது.

தயா மாஸ்டர் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் மொழிபெயர்ப்பாளர் ஜோர்ஜ் மாஸ்டர் ஆகியோருக்கு எதிரான குற்றப்புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட நடவடிக்கையின் பிரகாரம் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த வழக்கில் இருந்து ஜோர்ஜ் மாஸ்டர் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.