Breaking News

புதிய கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயம் திறந்து வைப்பு



புதிய கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயம் இன்று காலை 8.30 மணிக்கு யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையினால் திறந்துவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே, கடற்படைத் தளபதி, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் அருட் தந்தையர்கள், அருட் சகோதரிகள், பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.