Breaking News

வடக்கில் விகாரைகள் அமைக்கப்படுவதை எதிர்க்கவில்லை - சீ.வி.கே



வடமாகாணசபை வடக்கில் பெளத்த விகாரைகள் அமைக்கப்படுவதை எதிர்க்கவில்லை எனவும் சட்டத்துக்கு முரணான வகையில் அமைக்கப்படுவதையே எதிர்கிறோம் என வடமாகாணசபை அவைதலைவர் சீ.வி.கே.சிவஞானம் கூறியுள்ளார்.

வடக்கில் பெளத்த விகாரைகள் அ மைக்கப்படுவதை வடமாகாணசபை எதிர்ப்பதாகவும், அதற்கு மாகாணசபைக்கு அதிகாரம் இல்லை போன்ற வார்த்தை பிரயோகங்களை பயன்படுத்தி புத்தசாசன அமைச்சர் விஜய தாஸ ராஐபக்‌ஷ நாடாளுமன்றில் நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) உரையாற்றியிருந்தார்.

இந்த விடயம் தொடர்பாக நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு வடமாகாணசபை பேரவை செயலகத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்த அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் அங்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

வடமாகா ணசபையின் 66ஆம் அமர்வின் போது, வடக்கில் நடப்பதற்கு ஒப்பாக கிழக்கிலும் தனியார் காணிகளில் விகாரைகள் அமைக்கப்படுவது தொடர்பாகவும், கிழக்கு மாகாணத்தில் மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் மதவாதம், இனவாதம் ஆகியவற்றை தூண்டும் வகையில் செயற்படும் நிலையில் அது இன ஜக்கியத்தை பாதிக்கும் என்பதால் குறித்த விகாராதிபதி தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

இது போன்று தெற்கில் உள்ள மக்களும், அரசியல் வாதிகளும், புத்தசாசன அமைச்சரும் விளங்கி கொள்ள வேண்டும் எனவும் மேலும் ஒரு பிரேரணை சபையில் அங்கீ கரிக்கப்பட்டதன் பின் அது சபையின் பிரேரணையாகும் எனவும் குறிப்பிட்டார்.

அதேபோல் புத்தசாசன அமைச்சர் எம்நம்பிக்கைக்கு உரியவர் என்ற அடிப்படையில் எம்மோடு இந்த விடயம் தொடர்பாக பேசியிருக்க முடியும் என்றும் வடமாகாணசபை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இனவாதம், மதவா தம் ஆகியவற்றை தூண்டும் வகையி ல் தீர்மானம் நிறைவேற்றியது இல்லை என்றும் எதிர் காலத்திலும் நிறைவேற்றபடாது எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்.