Breaking News

மாகாண முதலமைச்சர்களுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்குவதற்கு மகிந்த கடும் எதிர்ப்பு



புதிய அரசியலமைப்பின் மூலம், மாகாண முதலமைச்சர்களுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்குவதற்கு சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.

‘இந்தியாவில் கூட, மாநில ஆளுனர்கள், குடியரசுத் தலைவரின் அதிகாரத்தை நிறைவேற்றுபவர்களாக இருக்கின்றனர்.

இந்தியாவில், ஆளுனர்களால் மாநில சட்டமன்றங்களை கலைக்க முடியும். ஆனால் சிறிலங்காவில் ஆளுனர்களால் அதனைச் செய்ய முடியாது.

இது சிறிலங்காவின் ஒற்றையாட்சிப் பண்பை பாதுகாக்கும் விதிமுறைக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், சிங்களப் பெரும்பான்மையினரை பகைத்துக் கொண்டு தமிழ் சிறுபான்மையினரை திருப்திப்படுத்த முனைகின்றனர்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.