Breaking News

ஆட்டோவை மோதித்தள்ளிவிட்டு ஓடிமறைந்தது கன்ரர் வாகனம்! இரண்டுபிள்ளைகளின் தந்தை படுகாயம்!

யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் கன்ரர் ரக வாகனம் ஒன்று முச்சக்கரவண்டியில் வந்த ஒருவரை மோதித்தள்ளிவிட்டு தப்பி ஓடியதில் முச்சக்கரவண்டிச் சாரதி படுகாயம் அடைந்துள்ளதாக தெரியவருகின்றது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
இன்று இரவு 8மணியளவில் கல்வியங்காடு கட்டைப்பிராய் முத்துமாரி அம்மன் கோவில் வீதிக்குத் திரும்புகின்ற பருத்தித்துறை வீதிப்பகுதியில் பயணித்த முச்சக்கரவண்டியை பின்னால் இருந்து வந்த கன்ரர் வாகனம் மோதித்தள்ளியுள்ளது.

விபத்து இடம்பெற்ற உடன் கன்ரர் வாகனத்தின் சாரதி வாகனத்துடன் தப்பி ஓடியிருப்பதாக சம்பவத்தை அவதானித்த ஒருவர் கிங்டொத்தின் செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார்.

முச்சக்கரவண்டியில் பயணித்தவர் இரண்டுபிள்ளைகளின் தந்தையான எஸ்.சசிகரன் (வயது 42) என்பவராவார். அவர் படுகாயம் அடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அப்பகுதி மக்களால் கொண்டு செல்லப்பட்டு அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தற்போது தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தவல்கள் கிடைத்துள்ளது.

முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்