Breaking News

விபத்தில் சிக்கியவர்களை வைத்தியசாலையில் சேர்த்த யாழ் மக்களுக்கு நன்றி



யாழ்ப்­பாணம் சாவ­கச்­சேரி சங்­கத்­தானை பகு­தியில் இடம்­பெற்ற கோர விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். இவ்விபத்தில் சிக்கிய எமது உறவுகளை தமிழ் மக்கள் உடனடியாக மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்ததோடு சகல உதவிகளையும் செய்தனர். சிங்களவர்கள் மீது வெறுப்பாக இருப்பார்கள் என நினைத்­து­கொண்­டி­ருந்த நிலையில் விபத்தில் தமிழ் மக்­களே எமக்கு பூரண உதவிகளை வழங்கினார்கள் என விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவுகள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.

விபத்து சம்­ப­வத்­தை­ய­டுத்து உயி­ரி­ழந்­த­வர்­களின் உற­வி­னர்கள் நேற்று அதி­காலை முதல் யாழ்.போதனா வைத்­தி­ய­சா­லைக்கு வருகை தந்­தி­ருந்த நிலையில் அவர்­க­ளுக்­கான தங்­கு­மிடம் உணவு ஏற்­பா­டுகள் போன்ற அவர்­க­ளது அனைத்து தேவைகள் தொடர்­பான ஏற்­பா­டு­க­ளையும் யாழ்.போதனா வைத்­தி­ய­சா­லை­யினர் ஏற்­பாடு செய்­தி­ருந்­த­தாக வைத்­தி­ய­சா­லையின் பணிப்­பாளர் சத்­தி­ய­மூர்த்தி தெரி­வித்தார்.

இதே­வேளை விபத்து சம்­பவம் இடம்­பெற்ற போது இன பேதங்­களை மறந்து காய­ம­டைந்­த­வர்­களை உட­ன­டி­யாக வைத்­தி­ய­சா­லையில் சேர்ப்­ப­தற்கு உத­விய யாழ்.மக்­க­ளுக்கு உயி­ரி­ழந்த மற்றும் காய­ம­டைந்­த­வர்­களின் உற­வி­னர்கள் தமது நன்­றி­களை தெரி­வித்­துள்­ளனர். 

குறிப்­பாக இது தொடர்­பாக இச் சம்­ப­வத்தில் உயி­ரி­ழந்­த­வர்­களின் உற­வி­னர்கள் சிலர் தெரி­விக்­கையில் தமி­ழர்கள் எம்­மீது வெறுப்­பாக உள்­ளார்கள்,

என நினைத்­து­கொண்­டி­ருந்த நிலையில் இவ் விபத்தில் தமிழ் மக்­களே எமக்கு பூரண உதவிகளை வழங்கியிருந்தார்கள். எமது இறந்த உறவுகளையும் காயமடைந்தவர்களையும் உடனடியாகவே வாகனத்தில் இருந்து மீட்டெடுத்து வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கும் எனைய உதவிகளை செய்வதற்கும் பூரண ஒத்துழைப்பை வழங்கியிருந்தார்கள். 

அத்துடன் யாழ்.போதனா வைத்தியசாலையின் நிர்வாகத்தினரும் தங்குமிட உணவு ஏற்பாடுகளை வழங்கியிருந்தனர். 

இவ்வாறான நிலையில் இவர்கள் எமக்கு வழங்கிய உதவிகளை சாகும் வரையில் மறக்க மாட்டோம் என்று நன்றிகளை தெரிவித்துள்ளனர். 

நெஞ்சு, வயிறு பகுதிகளில் பலமாக அடி பட்டதே மர­ணத்­திற்­கான காரணம்..

யாழ்ப்­பாணம் சாவ­கச்­சேரி சங்­கத்­தானை பகு­தியில் இடம்­பெற்ற கோர விபத்தில் பலி­யான பதி­னொரு பேரி­னதும் சட­லங் கள் யாழ்ப்­பா­ணத்தில் இருந்து விசேட வானூர்தி மூலம் நேற்று களுத்­து­றைக்கு கொண்டு செல்­லப்­பட்­டன. 

மேலும் குறித்த பதி­னொரு பேருக்கும் நெஞ்சு, வயிறு ஆகிய பகு­திகள் உள்­ள­டங்­க­லாக உடலின் பல பாகங்­க­ளிலும் ஏற்­பட்ட காயங்­களே மர­ணத்­திற்­கான காரணம் என யாழ்.போதனா வைத்­தி­ய­சா­லையின் சட்ட வைத்­திய அதி­காரி மயூ­ரதன் தெரி­வித்­துள்ளார்.

நேற்­று­முன்­தினம் சனிக்­கி­ழமை யாழ்ப்­பாணம் சாவ­கச்­சேரி சங்­கத்­தானை பகு­தியில் களுத்­து­றையில் இருந்து வந்த சுற்­றுலா பய­ணி­க­ளது வாக­னமும் யாழ்ப்­பா­ணத்தில் இருந்து வவு­னியா நோக்கி சென்ற இலங்கை போக்­கு­வ­ரத்து

சபைக்கு சொந்­த­மான பஸ்ஸ{ம் நேருக்கு நேர் மோதி­யதால் ஏற்­பட்ட கோர விபத்து சம்­ப­வத்தில் வேனில் வந்த ஒரே குடும்­பத்தை சேர்ந்த பத்­துபேர் சம்­பவ இடத்­தி­லேயே உயி­ரி­ழந்­தி­ருந்­தனர்.

அத்­துடன் குறித்த சம்­ப­வத்தில் வேனில் பய­ணித்த இரு­வரும் மற்றும் பஸ்ஸில் பய­ணித்த நால்­வ­ரு­மாக ஆறு பேர் படு­கா­ய­ம­டைந்த நிலையில் யாழ்.போதனா வைத்­தி­ய­சா­லையில் சேர்க்­கப்­பட்­டி­ருந்­தனர். அவ்­வாறு வைத்­தி­ய­சா­லையில் சேர்க்­கப்­பட்­டி­ருந்­த­வர்­களில் ஒரு­வ­ரான குறித்த வேனில் பய­ணித்த பதி­னொ­ரா­வது நபரும் சிகிச்சை பல­னின்றி அன்று மாலை உயி­ரி­ழந்­தி­ருந்தார்.

இதன்­படி களு­தா­வில மாத்­த­ளையைச் சேர்ந்த சுஜீத் பிர­சன்ன சில்வா (வயது 37), பத்­த­ர­கா­மத்தைச் சேர்ந்த உப்புல் இந்­தி­ர­ரட்ன (வயது 55), கல்­தோட்­டையைச் சேர்ந்த சும­னா­வதி (வயது 65), ஜெய­ரட்ண (வயது 75), மாதம்­பேயைச் சேர்ந்த குண­சேன (வயது 58), குண­ரட்ன (வயது 52), நந்­தா­வதி (வயது 67), லீலா­வதி (வயது 59), சந்­தி­ரா­வதி (வயது 60) லகுறு மது­சங்க (வயது 23), தயா­வதி (வயது 54), ஆகி­யோரே இவ் விபத்தில் உயி­ரி­ழந்­த­வர்­க­ளாவர். உயி­ரி­ழந்­த­வர்­களின் சட­லங்கள் யாழ்.போதனா வைத்­தி­ய­சா­லையில் வைக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் சாவ­கச்­சேரி பதில் நீதிவான் எஸ்.கண­ப­தி­பிள்ளை நேரில் சென்று மரண விசா­ர­னை­களை மேற்­கொண்­டி­ருந்தார். சட­லங்கள் தொடர்­பான பிரேத பரி­சோ­த­னை­களை யாழ்.போதனா வைத்­தி­ய­சா­லையின் சட்ட வைத்­திய அதி­காரி மயூ­ரதன் மேற்­கொண்­டி­ருந்தார்.

இதன்­படி குறித்த மரணம் ஏற்­பட்­ட­மைக்­கான காரணம் தொடர்பில் சட்ட வைத்­திய அதி­காரி தெரி­விக்­கையில், அனை­வ­ரது உட­லிலும் நெஞ்சு மற்றும் வயிற்று பகு­தியில் பல­மான காயம் ஏற்­பட்­டி­ருந்­தன. அத்­துடன் உடலில் ஏனைய பகு­தி­க­ளிலும் ஏற்­பட்­டி­ருந்த காயங்­களே மர­ணத்­திற்­கான கார­ண­மாகும். குறிப்­பாக உயி­ரி­ழந்­த­வர்­க­ளது உடலில் உள்ள காயங்­களை அடிப்­ப­டை­யாக கொண்டு பார்க்கும் போது விபத்து இடம்­பெற்று சிறிது நேரத்­தி­லேயே உயி­ரி­ழந்­தி­ருக்­கலாம் எனவும் அவர் தெரி­வித்­தி­ருந்தார்.

இதனை தொடர்ந்து பதி­னொரு சட­லங்­களில் மாத்­தளை பகு­தியை சேர்ந்­த­வரின் சடலம் வாக­னத்தில் கொண்டு செல்­லப்­பட்­ட­துடன் ஏனைய பத்து பேரின் சட­லங்­களும் இலங்கை விமான படை­யினர் மற்றும் தரைப்­ப­டை­யி­னரின் ஒத்­து­ழைப்­புடன் விஷேட வானூர்தி மூலம் யாழ்ப்­பாணம் பலா­லியில் இருந்து கொழும்பு இரத்­ம­லானை விமான நிலை­யத்­திற்கு கொண்டு செல்­லப்­பட்டு அங்­கி­ருந்து களுத்­துறை மாதம்பை மற்றும் ஏனை­யோ­ரது இடங்­க­ளுக்கு வாக­னத்தில் கொண்டு செல்­லப்­பட்­டன.