Breaking News

பாலியல் குற்றச்சாட்டு விசாரணையை மூடிமறைக்க முயற்சிக்கும் பல்கலைகழக நிா்வாகம்!

யாழ் பல்கலைகழகத்தின் இராமநாதன் நுண்கலை கல்லூரியின் விரிவுரையாளா் ஒருவரின் பாலியல்முறைகேடுகள் தொடா்பில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கொடுத்த முறைப்பாட்டையடுத்து குறித்த விரிவுரையாளா் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டிருந்தாா்.

குறித்த விரிவுரையாளரின் நடவடிக்கை தொடா்பில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் யாழ் சுன்னாகம் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடும் பதிவு செய்திருந்தனா். இதனை தொடா்ந்து யாழ் பல்கலைகழக நிா்வாகம் குறித்த விரிவுரையாளரை பணி நீக்கம் செய்திருந்தது.

இந்தநிலையில் தற்போது பொலீஸாரினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட வரும் நிலையில் குறித்த விவகாரம் தொடா்பான விசாரணையை நீா்த்துப்போகும் செய்யும் வகையில் பல்கலைகழக நிா்வாகம் நடந்துகொள்வதாக தமக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட பல பெண்கள் தெரிவித்துள்ளனா்.

விசாரணைக்கு பல்கலைகழக நிா்வாகம் வழங்கும் ஒத்துழைப்பு தொடா்பில் தமக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்றும் இந்த நிலைமை சிலவேளைகளில் குறித்த சம்பவத்தை மூடி மறைத்துவிடக்கூடிய நிலைமைய தோற்றுவித்து விடும் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் கவலை தெரிவித்துள்ளனா்.