Breaking News

சுவாமிநாதன் : கூட்டமைப்பினர் சபையில் கடும் மோதல்!



வடக்கில் பொருத்து வீடுகள் அமைப்பது தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில்வாத விவாதங்கள் ஏற்பட்டன

வடக்கில் இடம்பெயர்ந்தவர்களுக்கு உறுதியான செலவு குறைந்த நிரந்தரமான வீடுகளேஅவசியமானவை.

எனினும் அமைச்சர் டி எம் சுவாமிநாதன் இதனை நிராகரித்து பொருத்து வீடுகளையே அமைப்பதுஎன்ற கொள்கையில் உள்ளார்.

எனவே அமைச்சர் சுவாமிநாதன் பதவி விலக வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏசுமந்திரன் கோரிக்கையை முன்வைத்தார்.

இதன்போது உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தனும்வடக்கில் உள்ள மக்களுக்கு நிரந்தரமான வீடுகளே தேவை என்று குறிப்பிட்டார்.

இந்த விவாதத்தில் மஹிந்த ராஜபக்ச தரப்பும் இணைந்துக்கொண்டது.


இதனையடுத்து அமைச்சர் சுவாமிநாதனுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில்சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்யவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கதெரிவித்தார்.

இந்தநிலையில் குறித்த பிரச்சினை தொடர்பாக தாம் பிரதம மந்திரியுடனேயே பேச்சுநடத்தவுள்ளதாகவும் சுவாமிநாதனிடம் தாம் பேசப் போவதில்லை என்றும் கூட்டமைப்பினர்தெரிவித்தனர்.