Breaking News

இலங்கையின் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் குறித்து ஐ.நா கவலை



சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவின் சில பிரிவுகள் குறித்து ஐ.நா கவலை வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவில் உள்ள ஐ.நா வதிவிடப் பிரதிநிதி உனா மக்கோலி, இதுகுறித்துக் கருத்து வெளியிடுகையில், சட்டவாளர் இல்லாத நிலையில், ஒப்புதல் வாக்குமூலம் பெறுவதற்கு, அனுமதிக்கும் பிரிவு உள்ளிட்ட பல பிரிவுகள் குறித்து ஐ.நா கரிசனை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

“நாம் பல விடயங்கள் குறித்து கரிசனைகளை எழுப்பியுள்ளோம். சட்டவாளர்கள் இல்லாமல் ஒப்புதல் வாக்குமூலம் பெறுவது, அனைத்துலக சட்ட நியமங்களின் படி 48 மணி நேரமாக உள்ள ஆரம்ப தடுப்புக்காவலை 72 மணித்தியாலங்களாக அனுமதிப்பது உள்ளிட்ட விடயங்களில் புதிய வரைவு கவலை தருகிறது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.