Breaking News

ஒற்றையாட்சிக்குள் ஒருபோதும் தீர்வு காண முடியாது – சிவமோகன்

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு ஒற்றையா ட்சிக்குள் ஒருபோதும் தீர்வு காண முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்றில் வரவு – செலவுத்திட்ட விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களுக்கான வாழ்வியல் பிரச்சினைகள் தனித்துவமானவை.

நாம் வடக்கு, கிழக்கில் எதிர்நோக்கும் பிரச்சனைகள் ஏனைய மாகாண மக்களுக்கு இல்லாதவை என்பதை முதலில் இந்த நாடாளுமன்றம் உணர்ந்துகொள்ள முன்வர வேண்டும்.

அதுதான் தமிழர்களுக்கான இனப்பிரச்சினையாக உருவெடுத்தது.

1948இல் இலங்கை சுதந்திரமடைந்த பின் இன்று 70 வருடங்களைக் கடக்கின்ற போதிலும் இலங்கை ஒரு நாடு என எண்ணுபவர்கள் வடக்கு, கிழக்கு மக்களின் யதார்த்த பூர்வமான பிரச்சினைகளை உணர முன்வரவில்லையென்பது கசப்பான ஓர் உண்மை என்பதை கூறி வைக்க விரும்புகிறேன் எனவும் சிவமோகன் குறிப்பிட்டுள்ளார்.