Breaking News

ஒபாமா இலங்கைக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சியை பாருங்களேன்!



இலங்கையின் சமகால அரசாங்கத்தின் வெளிநாட்டு கொள்கை, அனைத்து நாடுகளுடனும் இணைந்து செயற்படக் கூடியதாக அமைந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மலேசிய விஜயத்தில் இணைந்துள்ள மங்கள சமரவீர, ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டார்.

இலங்கையின் சமகால அரசாங்கத்தின் வெளிநாட்டு கொள்கைக்கு மற்ற நாடுகளில் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் கருத்து தொடர்பிலும் மங்கள கருத்து வெளியிட்டார்.

மக்களுக்கு இன்று பொருளாதார முன்னேற்றமே அவசியமாக உள்ளதெனவும், அந்த பொருளாதாரத்தை வழங்குவதற்கு ஹம்பாந்தோட்டைக்கு சீனாவா? இந்தியாவா என்பது முக்கியமல்ல என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு வெகு விரைவில் கிடைக்கவுள்ள இன்னுமொரு அமெரிக்க நிதி தொடர்பில் மங்கள சமரவீர இதன் போது கருத்து வெளியிட்டிருந்தார்.

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா பதவியில் இருந்து விலகுவதற்கு முன்னர் இந்த நிதியை இலங்கைக்கு பரிசாக வழங்கவுள்ளார். Millennium challenge compactயை இலங்கைக்கு, அமெரிக்காவினால் வழங்கப்படவுள்ளது.

அதில் 500 மில்லியன் டொலருக்கும் அதிகமான பணம் உள்ளது. இது கடன் அல்ல. இது உதவி. ராஜபக்ச ஆட்சியில் அமெரிக்காவினால் அது முழுமையாக இரத்து செய்யப்பட்டிருந்ததென அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.