எனது காலத்தில் சிறந்த பொலிஸ்மா அதிபர்களே இருந்தனர் ; கோட்டாபய
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிகாலத்தில் சிறந்த மற்றும் தொழிற்றுரை சார்ந்த பொலிஸ்மா அதிபர்களே பதவிகளை வகித்ததாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
யார் எவ்வாறு ஆட்சி நடத்தினாலும் தேசிய பாதுகாப்பிற்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், நாட்டின் பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்துவதானது இனவாத அல்லது வேறு குழுக்களை தாக்குவது அல்ல என்றும் கூறினார்.
கொழும்பிலுள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம விருந்திரனராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வின் பின்னர் அங்கிருந்து திரும்பிய கோட்டாபய ராஜபக்ஷவிடம் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் கையடக்கத் தொலைபேசிக்கு வந்த அழைப்பு குறித்து ஊடகவியலாளர்கள் இதன்போது வினவினர்.
“நான் பதவியிலிருந்த காலத்தில் சிறந்த தொழிற்றுரையைச் சார்ந்த பொலிஸ்மா அதிபர்களே இருந்தனர். எனினும் தற்போது உள்ள பொலிஸ்மா அதிபர் தொடர்பாக பேசுவது சிறந்ததல்ல. 30 வருடங்கள் சேவைக் காலமாக இருந்த போதிலும் அவர்கள் தொழிற்றுரை எனப்பார்க்கும்போது எவ்வாறு செயற்பாடுகளை முன்னெடுப்பது குறித்து அவர்களே தீர்மானிக்க வேண்டியவையாகும்” – என்றார்.