இறுதிக்கட்ட யுத்தத்திற்கு பின்னர் முல்லையில் 42 ஆயிரம் குடும்பங்கள் மீள்குடியமர்வு
இறுதிக்கட்ட யுத்தத்திற்கு பின்னர் இடம்பெயர்ந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இதுவரையான காலப்பகுதியில் 42 ஆயி ரத்து 158 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 33 ஆயிரத்து 750 அங்கத்தவர்கள் மீளக்குடியமர்ந்துள்ளனர் என முல்லைத்தீவு மாவட்ட செயலக புள்ளி விபர தகவல்கள் தெரிவிக்கின்றன.
கரைத்துறைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவுகளில் அதிகளவான மக்கள் மீள்குடியேறியுள்ளனர்.
இதன்பிரகாரம் கரைதுறைப்பற்றில் 13 ஆயிரத்து 224 குடும்பங்களைச் சேர்ந்த 42 ஆயிரத்து 79பேரும், புதுக்குடியிருப்பில் 12 ஆயிர த்து 918 குடும்பங்களைச் சேர்ந்த 40 ஆயிரத்து 14 பேரும் தமது சொந்த இடங்களுக்கு மீண்டும் திரும்பியுள்ளனர்.
இதேவேளை ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவில் 5 ஆயிரத்து 961 குடும்பங்களைச் சேர்ந்த 19 ஆயிரத்து 415 பேர் மீள் குடியம ர்ந்துள்ளதாக மாவட்ட புள்ளிவிபரங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
துணுக்காயில் 3 ஆயிரத்து 786 குடும்பங்களைச் சேர்ந்த 11 ஆயிரத்து 856 பேரும் மாந்தை கிழக்கில் 2 ஆயிரத்து 933 குடும்பங்களைச் சேர்ந்த 9 ஆயிரத்து 197 பேரும் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
மணலாறு பிரதேச செயலகப் பிரிவில் 3 ஆயிரத்து 336 குடும்பங்களைச் சேர்ந்த 11 ஆயிரத்து 189 பேர் குடியமர்ந்துள்ளனர் என்று புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன