Breaking News

பாடசாலை மாணவனைத் தாக்கவில்லை – மறுக்கிறார் குணரத்ன



கொழும்பின் முன்னணிப் பாடசாலை ஒன்றின் மாணவனைத் தாம் தாக்கியதாக வெளியான செய்திகளை, சிறிலங்கா இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன நிராகரித்துள்ளார்.

டி.எஸ்.சேனநாயக்க வித்தியாலய மாணவன், ஒருவர் பரீட்சை எழுதி விட்டு வரும் போது, மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன அவரது சீருடையில் பிடித்து இழுத்து, தாக்க முயற்சித்தார் என்று செய்திகள் வெளியாகியிருந்தன.

பாடசாலைக்கு வெளியே மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவின் சகோதரியின் மகன் இன்னொரு மாணவனால் தாக்கப்பட்டமை தொடர்பாக, காவல்துறையில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தை அடுத்து, அந்த இடத்துக்குச் சென்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, தனது மருமகனைத் தாக்கிய மாணவனை தாக்கினார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, அந்த மாணவனை தான் தாக்கவோ, சந்திக்கவோ இல்லை என்று கூறியுள்ளார்.