முல்லைத்தீவில் வெளிச்ச வீடொன்று அமைக்க கேட்டு மீனவர்கள் கோரிக்கை
வெளிச்ச வீடு இன்மையால் கடற்தொழிலாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ள மீனவ அமைப்புக்கள் வெளிச்சவீடு ஒன்றினை அமைத்துத் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டம் கரைத்துறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் 4 ஆயிரத்து 212 மீனவ குடும்பங்கள் வசித்து வருவதுடன் 5 ஆயிரத்து 050 தொழிலாளர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்பகுதியில் வெளிச்சவீடு இன்மையால் கடற்றொழிலாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் கடற்கரைப் பிரதேசத்தில் வெளிச்சவீடு ஒன்றினை அமைத்துத்தருமாறு மீனவ அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.