Breaking News

உலகின் மிக உயர்ந்த நத்தார் மரம் – கொழும்பில் தயார்நிலையில்



உலகின் மிக உயரமான நத்தார் மரத்தை நிறுவும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள காலிமுகத் திடலிலேயே, இந்த நத்தார் மரம் நிறுவப்பட்டுள்ளது.

325 அடி உயரத்தில் நிறுவப்பட்டுள்ள இந்த நத்தார் மரம், உலகின் மிக உயரமான நத்தார் மரம் என்று கின்னஸ் சாதனை ஏட்டில் பதிவு செய்யப்படவுள்ளது.

இந்த நத்தார் மரத்தின் உச்சியில் 20 அடி உயரமுள்ள நட்சத்திரமும் அமைக்கப்படுகிறது.

கொழும்பின் வானுயர்ந்த கட்டடங்களுக்குப் போட்டியாக எழுந்துள்ள இந்த நத்தார் மரத்தின் மின் அலங்காரம் நேற்றிரவு பரீட்சித்துப் பார்க்கப்பட்டது.

இந்த நத்தார் மரத்தில் 8 இலட்சம் மின்குமிழ்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த நத்தார் மரத்தை உருவாக்குவதற்கு சுமார் 80 ஆயிரத்து 600 டொலர் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இன்று இந்த நத்தார் மரம் அதிகாரபூர்வமாக திறந்து வைக்கப்படும்.