கரும்புச் செய்கையினை முல்லைத்தீவு மாவட்டத்திலும் மேற்கொள்ள தீர்மானம்
கரும்பு செய்கையினை முல்லைத்தீவு மாவட்டத்திலும் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 5000 ஹெக்டேயர் நிலப்பரப்பில் இந்த கரும்பு செய்கை மேற்கொள்ள முதலீட்டாளர்கள் பலர் விருப்பம் கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த செயற்திட்டத்தில், உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளதாகவும், கரும்புச் செய்கையின் பின்னரான அறுவடைக்காக நிலையான விலையினை நிர்ணயிப்பதற்கும் தமது அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், மேலும் வடமாகாணத்தில் 4 தொழிற்சாலைகளை புதிததாக ஆரம்பிப்பதற்கு தமது அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஆனையிறவு உப்பளம், பரந்தன் இராசாயன தொழிற்சாலை, காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலை என்பவற்றை மீள ஆரம்பிப்பது தொடர்பிலும் ஆரம்ப கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் றிசாத் கூறியிருந்தார்.