ஜெயலலிதாவின் மறைவிற்கு வட மாகாண சபையில் அஞ்சலி
தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் மறைவிற்கு வட மாகாண சபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டதோடு, 2 நிமிடங்கள் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமான வட மாகாண சபையின் 67ஆவது அமர்வில், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அஞ்சலி உரையை நிகழ்த்தியுள்ளார்.
வட மாகாண சபை சார்பில், முதலமைச்சரின் இரங்கல் உரை தமிழகத்திற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது.