விசேட அதிரடிப் படையின் ரோந்து நடவடிக்கை;அச்சத்தில் மக்கள்
யாழ்.மாவட்டத்தில் விசேட அதிரடிப் படையினருடைய இரவு, பகல் ரோந்து நடவடிக்கைகள் தொடர்ந்து வருகின்றமை பொது மக்கள் மத்தியில் அச்ச உணர்வினை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதத்தில் என்றும் இல்லாதவாறு யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மாவீரர் தினம் உணர்வு பூர்வமான அனுஸ்ரிக்கப்பட்டது.
இவ்வாறு மாவீரர் தினத்தினை பொது மக்கள் அனுஸ்ரிப்பதை தடுத்து அவர்களை அச்சுறுத்தலுக்குள் வைத்திருக்கும் முகமாக பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையினருடைய இரவு பகல் ரோந்து சேவைகளில் அவர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இருந்த போதும் அச்சுறுத்தல்களை மீறியும் மாவீரர் தினம் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஸ்ரிக்கப்பட்டது.
இந்நிலையில் மாவீரர் தினம் முடிவடைந்த நிலையில் பொலிஸாருடைய ரோந்து நடவடிக்கைகள் குறைக்கப்பட்டுள்ள போதும் விசேட அதிரடிப்படையினருடைய ரோந்து நடவடிக்கைகள் குறைக்கப்படவில்லை.
விசேட அதிரடிப் படையினர் தொடர்ந்தும் மோட்டார் சைக்கில் மற்றும் வீதி ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை பொது மக்கள் மத்தியில் அச்ச உணர்வினை ஏற்படுத்தியுள்ளது.