Breaking News

கருணாவுக்கு பிணை கிடைத்தது!



தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாண சிறப்புத் தளபதியாக இருந்த நிலையில் அந்த அமைப்பிலிருந்து விலகி அரசாங்கத்துடன் இணைந்துகொண்ட கருணா அம்மான் என்ற அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலையாகிய நிலையில் பிணை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் அரசுக்கு சொந்தமான வாகனங்களை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் பொலிஸ் நிதிமோசடிப் பிரிவினால் நவம்பர் மாதம் 30 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.



இந்த நிலையில் விநாயகமூர்த்தி முரளிதரனின் கடந்த திங்கட்கிழமை தாக்கல் செய்த பிணை மனுக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.