தமிழ் மக்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டு - விஜயகலா வலியுறுத்தல்
இந்த பிரதேசங்களில் வாழ்கின்ற தமிழ் மக்களில் தொண்னூற்று ஒன்பது வீதமானவா்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைக்கு வாக்களிக்க வேண்டும் தவிர துரோகிகளுக்கு வாக்களிக்க கூடாது என ஜக்கிய தேசியக் கட்சியின் இராஜாங்க அமைச்சா் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளாா்.
கடந்த புதன் கிழமை கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் தீயினால் எரிந்த பொதுச் சந்தை வியாபாரிகளுக்கு நட்டஈடு வழங்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவா் இவ்வாறு தெரிவித்தாா். அங்கு அவா் மேலும் உரையாற்றுகையில்
தமிழ் மக்கள் யாருக்கும் வாக்களிக்கலாம், சிறிலங்கா சுதந்திர கட்சிக்கு வாக்களிக்கலாம்,ஜக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிக்கலாம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு க்கு வாக்களிக்கலாம்.
ஆனால் தமிழ் மக்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைக்குத்தான் வாக்களிக்க வேண்டும். என கோருகின்றேன். இந்த பிரதேசங்களில் 99 வீதமான மக்கள் தமிழ் மக்கள்தான் வாழ்கின்றனா். எனவேதான் தமிழ் மக்கள் வேறு கட்சிக்களுக்கு வாக்களிக்கும் போது துரோகிகளுக்கு வாக்களிக்காதீர்கள். எல்லோரும் தமிழ்த் தேசியக் கூட்டமைக்கே வாக்களிக்கவேண்டும் என்று தொிவித்த அவா்
தற்போது எமது ஜக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திர கட்சி தமிழ்த்தேசியக் கூட்டமைக்கு ஆகியவை இணைந்தே இந்த நல்லாட்சியை அமைத்திருக்கின்றாா்கள். நாம் பேரினவாதக் கட்சியை சோ்ந்தவா்களாக இருந்தாலும் யாருக்கும் துரோகமிழைக்கவில்லை. எனவும் இனவாதம் பேசி எதனையும் பெற்றுக்கொள்ள முடியாது. இனவாதம் மீண்டும் மக்களை படுகுழிக்குள்தான் தள்ளுகின்றது.எனவே அமைதியாக இருந்து கிடைப்பதனை பெற்றுக்கொள்ளவேண்டும் என்றும் தெரிவித்தாா்.
இந்த நிகழ்வில் அமைச்சர் டிஎம் சுவாமிநாதன் வட மாகாண ஆளுநா் றெஜினோல்ட் குரே, பாராளுமன்ற உறுப்பினா் சி. சிறிதரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினா் மு. சந்திரகுமாா், அரச அதிபா் சுந்தரம் அருமைநாயகம், மேலதிக அரச அதிபா் சத்தியசீலன், கரைச்சி பிரதேச செயலாளா் கோ. நாகேஸ்வரன், உள்ளுராட்சி உதவி ஆணையாளா் பிரபாகரன், கரைச்சி பிரதேச செயலாளா் க.கம்சநாதன்,வியாபாரிகள் என பலா் கலந்துகொண்டனா்