Breaking News

இஸ்லாமியர்களை நாட்டுக்குள் அனுமதிக்க கூடாது



இஸ்லாமியர்களை நாட்டுக்குள் அனுமதிக்க கூடாது என்று கூறியது சரியானதே என்று அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் குடியரசு கட்சியின் சார்பில் அதிபர் தேர்தலில் வேட்பாளராக நின்ற டொனால்ட் டிரம்ப், “நான் மட்டும் அமெரிக்காவின் ஜனாதிபதியால், அமெரிக்காவில் வசிக்கும் இஸ்லாமிய மக்களுக்கு தடைவிதிப்பேன்.

ஏனெனில் அமெரிக்காவில் தீவிரவாதம் தலைதூக்குவதற்கு இஸ்லாமியர்களே காரணம்,” என தனது தேர்தல் பிரசாரங்களை முன்வைத்திருந்தார்.

மேலும் இஸ்லாமியர்களுக்கு எதிரான பல்வேறு சர்ச்சைக்குரிய யோசனைகளையும் முன்வைத்தார். இஸ்லாமியர்களுக்கு தனி பதிவேடு, அமெரிக்காவில் இஸ்லாமியர்கள் நுழைவதற்கு தடைவிதிப்பு போன்ற பல்வேறு யோசனைகள் மூலம் விமர்சனத்திற்கும் ஆளாகியிருந்தார்.

இந்நிலையில் கடந்த திங்கள் கிழமை ஜேர்மனியில் மார்க்கெட் பகுதியில் ‘டிரக்’ தாக்குதல் நடத்தப்பட்டது, இதில் 12 பேர் உயிரிழந்தனர். மேலும் ரஷ்ய தூதர் ஆண்ட்ரே கார்லோஃப் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த இரு தாக்குதலுக்கும் டொனால்ட் டிரம்ப் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளதோடு.

இவ்வாறான சூழ்சிலைகள் உருவாகுவதற்கு முஸ்லிம் வாழ் தீவரவாதிகளே காரணம். ஆகவே அவர்களை நாட்டுக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

“ஐரோப்பா, துருக்கியில் நிகழ்ந்திருப்பது பயங்கரமான சம்பவம். மிக மிக பயங்கரமானது. நம்முடைய உளவு மற்றும் நுண்ணறிவுப் பிரிவு நல்ல முறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

என்றாலும், மனிதாபிமானத்தின் மீது நடத்தப்பட்ட கோரமான தாக்குதலை சகிக்க முடியவில்லை” எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவங்களால், இஸ்லாமியர்கள் தொடர்பான திட்டங்கள் குறித்து எல்லோருக்கும் தெரியும். ஐரோப்பாவிலும், துருக்கியிலும் இப்போது நடந்திருப்பதைப் பார்க்கும்போது, என் யோசனை 100 சதவீதம் சரி என்பது நிரூபணமாகிறது’ என்றார். ஆகவே எனது முடிவுக்கு மாற்று கருத்து இல்லை என ட்ரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.